கோம்பை திருமலை ராயப் பெருமாள் கோயில் தேர் நிலைக்கு வந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2024 06:05
உத்தமபாளையம்; கோம்பை திருமலை ராயப் பெருமாள் கோயில் தேரோட்டம் நேற்று முன்தினம் துவங்கிய தேரோட்டம், இன்று மாலை நிலையில் நிறுத்தப்பட்டது.
கோம்பை திருமலை ராயப் பெருமாள் கோயில் வைகாசி விசாக தேரோட்ட நிகழ்ச்சிகள் மே 12 ல் துவங்கியது. ஜுன் 5 ம் தேதி வரை நடைபெறுகிறது. திருந் தேரோட்டம் நேற்று மாலை 4.10 மணிக்கு துவங்கி, மெயின்ரோட்டில் உள்ள பெருமாள் கோயில் அருகில் மாலை 5.45 மணிக்கு நிறுத்தப்பட்டது. பின் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு துவங்கிய தேரோட்டம் மேற்கு ரத வீதியிலிருந்து வடக்கு ரத வீதி வழியாக சென்று, கிழக்கு ரத வீதியில் மாலை 4.40 மணிக்கு நிலையில் நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் சீனிவாசராயர், எம்.எஸ்.ஏ. ராமகிருஷ்ணன், செயல் அலுவலர் அருணா தேவி உள்ளிட்ட அனைத்து சமூக தலைவர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து மண்டகப்படி நிகழ்ச்சிகள் ஜுன் 5 வரை நடைபெறுகிறது.