திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் மத்திய அமைச்சர் முருகன் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2024 03:05
காரைக்கால்; காரைக்கால் சனீஸ்வர பகவான் கோவிலில் மத்திய அமைச்சர் முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலுக்கு இன்று மத்திய அமைச்சர் முருகன் வருகை புரிந்தார். இவரை பா.ஜ.க.சார்பில் புதுச்சேரி மாநில துணைத்தலைவர் ராஜசேகரன் தலைமையின் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் திருநள்ளாறு கோவிலுக்கு வருகை புரிந்த இவரை கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மத்திய அமைச்சர் முருகன் தர்ப்பாரண்யேஸ்வரர், விநாயகர், முருகன், அம்பாள் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் மேற்கொண்டார். பின்னர் சனீஸ்வர பகவான் சன்னதியில் எள்ளு தீபம் ஏற்றி சிறப்பு தரிசன மேற்கொண்டார்.இதில் பா.ஜ.க. பிரமுகர் டாக்டர் விக்னேஸ்வரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.