திருப்பூர்; திருப்பூர் - பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ தன்னாசியப்பன் கோவிலில், 12ம் ஆண்டு பூச்சாட்டு பொங்கல் விழா நடந்து வருகிறது. கடந்த, 19ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. குத்து விளக்கு பூஜை, கொடுமுடி தீர்த்தம் செல்லுதல் நடந்தது. ஸ்ரீ சந்தான லட்சுமி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். மாலை, ஈசன் சலங்கை ஆட்டக்குழுவின் பெருஞ்சலங்கை ஆட்டமும், காராளன் கம்பத்தாட்டக் குழுவின் கம்பத்தாட்டம் நடந்தது. இன்று காலை, பிளேக் மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வருதல், முத்தையன் கோவிலில் இருந்து ஸ்ரீ மாகாளியம்மனுக்கு சீர் கொண்டு வருதல் மற்றும் உடையார் மண்ணலத்தில் இருந்து மாகாளியம்மன் எடுத்து வருதல் நடக்கிறது.