புதுச்சேரி; புதுச்சேரி, மொரட்டாண்டி நவக்கிரக கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்வர்ண சிதம்பர மஹா கணபதிக்கு மாம்பழத்தினால் மகா ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி நடைபெற்றது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் கணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.