அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் தெப்பத் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2024 05:05
காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் தெப்பத் திருவிழா நடந்தது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா கடந்த மே 15 கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. மே 20 திருக்கல்யாணமும் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே 23 ஆம் தேதி நடந்தது. நேற்று இரவு தெப்பத் திருவிழா நடந்தது. விழாவையொட்டி தெப்பத்தை சுற்றிலும் மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அரங்காவலர் சீனிவாசன், செயல் அலுவலர் விநாயகவேல் செய்து வருகின்றனர். இதில் சுற்றுவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.