பதிவு செய்த நாள்
30
மே
2024
03:05
செய்துங்கநல்லுார்; ஸ்ரீவைகுண்டம் அருகே,கருங்குளம் மாரிமுத்தம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே,கருங்குளத்தில் குலாலர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரிமுத்தம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. ஹோமங்கள் நடத்தி கோயில் விமானகலசங்கள், அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. திருமால் பூஜையை முன்னிட்டு, கோயிலில் காலையில் ஸ்தாபனகும்ப பூஜை, கும்பம் ஏற்றுதல், தாமிரபரணி நதியில் இருந்து பால்குடம், கிரகம் எடுத்து வருதல் தொடர்ந்து மதியம் அம்மன், இதர தெய்வங்களுக்கு மகாஅபிஷேகம், சிறப்பு பூஜை, மாலையில் பொங்கல் வழிபாடு, இரவு அக்கினிச்சட்டி எடுத்து வீதி வலம் வருதல், அலங்கார தீபாராதனை, நள்ளிரவு 1:00 மணிக்கு படைப்பு தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது