திருமலையில் அனுமன் ஜெயந்தி ஆரம்பம்; பால ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2024 01:06
திருப்பதி; திருமலையில் பிரம்மாண்டமான அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியது. ஆகாச கங்க ஸ்ரீ பாலஞ்சநேயசுவாமி கோயிலில் சுவாமிக்கு ஜபாலி தீர்த்தத்தில் வஸ்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாலஞ்சநேயசுவாமி, அஞ்சனாதேவியுடன் ஆகாசகங்காவில் குடியிருந்து வருகிறார், இங்கு ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. திருமலையில் அனுமன் ஜெயந்திவிழா சனிக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. முதலில் ஏ.வி.தர்மரெட்டி ஸ்ரீவாரி கோயிலில் இருந்து ஆகாசகங்கையில் உள்ள ஸ்ரீஅஞ்சனாதேவி மற்றும் ஸ்ரீபாலஞ்சநேயசுவாமிக்கு சிறப்பு வஸ்திரங்களை வழங்கினார். அனுமன் ஜனன வழிபாடுகள் தொடங்கி உபசாரங்கள், பஞ்சாமிர்த ஸ்நாபன திருமஞ்சனம் ஆகியன நடத்தப்பட்டன. உலக நன்மைக்காக, இறைவனுக்கு மிகவும் பிடித்தமான மல்லிகைப்பூவைக் கொண்டு சஹஸ்ரநாம அர்ச்சனை செய்தார். ஜூன் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தர்மகிரி வேதப் பள்ளியில் சுந்தரகாண்ட அகண்ட முழுமையான பாராயணம் நடைபெறும். சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்கு பயணம் செய்து சீதையின் சுவடுகளை அறியும் 2823 பாடல்களை பண்டிதர்கள் பாராயணம் செய்வார்கள். எப்படி ஹனுமான் ராமகாரியத்திற்கு ஓய்வில்லாமல் சென்றாரோ, அதேபோல் பண்டிதர்கள் 18 மணி நேரம் தொடர்ந்து பாராயணம் செய்வார்கள் என்றார் அலுவலர் தர்மரெட்டி. உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்காக எஸ்விபிசி முழு நிகழ்ச்சியையும் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.