குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வதுண்டு. குழந்தையிடம் நாம் அன்பு காட்டினால், குழந்தையும் நம் மீது அன்பு காட்டும். பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றது குழந்தை மனம். மகிழ்ச்சியையும், வருத்தத்தையும் அந்தந்த நேரத்தில் வெளிப்படுத்துவதோடு மறந்து விடும் குணமும் கொண்டது. அன்புக்கு கட்டுப்பட்ட நிலையில், கடவுளும் பக்தனின் கைக்குழந்தையாகி விடுவார் என்பதே இதன் பொருள். பால கணேஷ், பாலமுருகன், பாலகிருஷ்ணன், பாலசிவம், பாலாம்பிகா என்று குழந்தையாக வழிபடும் நோக்கம் இதுவே.