முத்தாலம்மன், கருப்பண சுவாமி கோயிலில் வைகாசி பொங்கல் உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2024 06:06
அலங்காநல்லூர்; அ.கோவில்பட்டி ஊராட்சி மீனாட்சிபுரத்தில் விநாயகர், முத்தாலம்மன், கருப்பண சுவாமி கோயில் வைகாசி பொங்கல் உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் மஞ்சமலை சுவாமிக்கு கனி மாற்றுதல், பெட்டி பூஜாரி சுவாமி அழைக்க செல்லுதல், அம்மன் கண் திறப்பு, பூ அலங்காரம், சன்னதி செல்லுதலை தொடர்ந்து முளைப்பாரி, மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். 2ம் நாள் கிடா வெட்டி, பொங்கல் வைத்தனர். பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து, அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்தி கடன் செலுத்தினர். அம்மன் பூஞ்சோலை சென்றார். நேற்று கருப்பண்ண சுவாமிக்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்து பிரசாதம் வழங்கப்பட்டது. மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.