பரமக்குடி; பரமக்குடி பெரிய கடை வீதியில் உள்ள குருநாத சுவாமி, வேலங்குடி கருப்பணசாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி மண்டல பூஜைகள் நடக்கிறது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா ஜூன் 17 அன்று நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை விழாவையொட்டி குருநாத சுவாமி, வேலங்குடி கருப்பணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு தினமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. அப்போது ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு தங்கம், வெள்ளி மற்றும் முத்தங்கி கவசங்கள் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தொடர்ந்து மண்டல பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.