காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் அமுதுபடையால் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2024 10:06
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழாவில் நேற்று அமுதுபடையால் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு கடந்த 19ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும்,நேற்று முன்தினம் பரமதத்தர் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் நடந்தது.மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை கைலாசநாதர்கோவிலில் வெள்ளி விமானத்தில் சிவபெருமான் காவியுடை,ருத்திராட்சம் தாங்கி பிச்சாண்டவர் மூர்த்தியாக எழுந்தருளி வீதி உலா நடந்தது.அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு இணையாக மாங்கனிகளை இறைந்தனர். முன்னதாக சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.பின்னர் அம்மையார் கோவிலில் நடைபெற்ற அமுதுபடையல் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன்,எம்.எல்.ஏ.,நாஜிம் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன். காளிநாசன், பாரிஸ் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மாங்கனித்திருவிழாவையொட்டில் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் வருகைப்புரிந்தனர்.அம்மையாரை வழிப்பட்டனர். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டது.