கன்னிவாடி:கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பிரதோஷ பூஜையில் பக்தர்கள் பங்கேற்றனர். * கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கோனூர் அருகே வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமிகள் கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.