திருக்கோஷ்டியூரில் பழமையான நந்தி சிலையை பாதுகாக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2024 04:07
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் கோயில் குளம் அருகில் உள்ள புராதன நந்தி சிலையை பாதுகாப்பாக பராமரிக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.
இங்குள்ள சவுமிய நாராயணப்பெருமாள் கோயில் முன்பாக உள்ளது திருப்பாற்கடல். கோயில் கோபுரத்திற்கு நேர் எதிரில் குளத்தின் கிழக்கு கரையில் கிழக்கு நோக்கி நந்தி சிலை உள்ளது. அண்மையில் கிழக்கு படித்துறை அருகில் தடுப்புச் சுவர் பராமரிப்பு நடந்தது. அப்போது நந்தி சிலை அப்பகுதி மண்ணில் புதைந்தது. பின்னர் மீண்டும் நந்தி மண்ணிற்கு வெளியே எடுக்கபட்டு சற்றே இடம் மாறியுள்ளது. மண்ணில் வீற்றிருக்கும் அந்த அழகான, பழமையான நந்தி சிலையை மேடை அமைத்து அதில் நிறுவி பாதுகாக்க பொதுமக்கள் விரும்புகின்றனர். தேவஸ்தான கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் கூறுகையில், கோயிலுக்கு தொடர்பில்லாத நந்தி சிலை என்றாலும் கல் மேடை அமைத்து பாதுகாக்கப்படும். என்றார்.