பதிவு செய்த நாள்
02
ஜூலை
2024
04:07
மேட்டுப்பாளையம்; சிறுமுகையில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில், ஆனி மாத கிருத்திகை விழா நடந்தது.
சிறுமுகை பழத்தோட்டத்தில், பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த, பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி மாத கிருத்திகை விழா நடைபெற்றது. காலை, 6:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், அதைத்தொடர்ந்து பாலாபிஷேகமும் நடந்தது. 8:00 மணிக்கு கால சந்தி பூஜை செய்யப்பட்டது. 10:00 மணிக்கு வெள்ளிக்குப்பம்பாளையம் கோவிந்தராஜ் வேணுகான பஜனைக் குழுவினரின், நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா அபிஷேக, அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தன. பூஜை முடிந்த பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் விழா கமிட்டியினர், கிருத்திகை வழிபாட்டு குழுவினர் மற்றும் வ.உ.சி., நகர், ஜீவா நகர், எஸ்.ஆர்.எஸ்., நகர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.