பதிவு செய்த நாள்
08
ஜூலை
2024
12:07
கோவை; கொடிசியா அருகேயுள்ள இஸ்கான் ஜெகன்நாதர் கோவிலில், ஜெகன்நாதர், பலதேவர், சுபத்ரா தேவிக்கு திருமஞ்சன சேவை நடந்தது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடந்த விழாவுக்கு, பக்தி வினோத சுவாமி தலைமை வகித்தார்.
ஒடிசா மாநிலம் புரி ஜெகன்நாதர் கோவில் தேர்த்திருவிழாவுக்கு முன்பாக, திருமஞ்சன அபிஷேகம் நடைபெறும். ஜெகன்நாதர், பலதேவர், சுபத்ரா தேவி விக்ரகங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறைதான் திருமஞ்சன அபிஷேகம் செய்யப்படும். கோவை கோவிலில் இதே போன்ற விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தி வினோதசுவாமி, சிறப்பு சொற்பொழிவு வழங்கினார். அப்போது அவர், “இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்று, ஜெகன்நாதர் பேரருளைப் பெற்று, பாவங்களில் இருந்து விடுபடலாம்,” என்று பேசினார். தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற, அகண்ட நாம சங்கீதம் நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்திருந்த, கலாசாரம், பாரம்பரிய தென், வட இந்திய 1,008 உணவுப் பதார்த்தங்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. கோவையில் தேர்த்திருவிழா, வரும் 13ம் தேதி நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.