பதிவு செய்த நாள்
09
ஜூலை
2024
10:07
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் வாராஹி அம்மன் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். ஆசார நவராத்திரியின் 4ம் நாள் விழாவில் வாராஹி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வாராகி அம்மனை வழிபட்டனர்.
தஞ்சாவூர், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான 88 திருக்கோவில்களுள் ஒன்றாகவும், உலக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்வது தஞ்சாவூர் பெரிய கோவில். இக்கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி வராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதையடுத்து 22வது ஆண்டாக வராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா 5ம் தேதி துவங்கி 15ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் 4ம் நாள் மஹாவாராஹி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று 9ம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரம், 10-ம் தேதி மாதுளை அலங்காரம், 11-ம் தேதி நவதானிய அலங்காரம், 12-ம் தேதி வெண்ணெய் அலங்காரம், 13-ம் தேதி கனிவகை அலங்காரம், 14-ம் தேதி காய்கறி அலங்காரம், 15-ம் தேதி புஷ்ப அலங்காரம் நடைபெறவுள்ளது. ஆஷாட நவராத்திரி விழாவின் போது மாலை நேரத்தில் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இறுதிநாளான 15-ம்தேதி வராஹி அம்மன் வீதியுலா நடைபெறவுள்ளது. அப்போது நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட வாணவேடிக்கையுடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.