33 அடி உயர விஸ்வரூப முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2024 06:07
மயிலாடுதுறை ; மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்; 33 அடி உயர விஸ்வரூப முருகனுக்கு புனிதநீர் வார்த்து நடைபெற்ற கும்பாபிஷேகத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள கஸ்தூரிபாய் தெருவில் பழமை வாய்ந்த தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 33 அடி உயரத்தில் புதிதாக முருகன் சுதை சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா கடந்த பத்தாம் தேதி கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கியது. நான்காம் கால யாக சாலை பூஜை இன்று காலை நிறைவடைந்த நிலையில் புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோபுர கலசத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து 33 அடி உயர முருகன் சிலை மற்றும் மூலவருக்கு புனித நீரால் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதை மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.