பொன்னேரி புஷ்பரதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2024 11:07
திருவள்ளூர் ; பொன்னேரி வட்டம் ஞாயிறு கிராமம் அருள்மிகு புஷ்பரதீஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முன்னதாக நேற்று 12ம் தேதி யாக சாலை பூஜைகள், ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, மகா கும்ப புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து, கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, சோமு, இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் கே சித்ராதேவி, திருக்கோவில் செயல் அலுவலர் மாதவன், இந்த சமய அறநிலையத்துறை அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் கலந்து கொன்டனர்.