நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் ஆனி உத்திர விழா நடந்தது. இதையொட்டி கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள நடராஜருக்கு இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.பின்னர் மூலவர் கைலாசநாதர், செண்பகவல்லி தாயாருக்கும், நடராஜர் சமேத சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.