பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
01:07
மூலம்: தெய்வீக சிந்தனை கொண்ட உங்களுக்கு, ஆடி மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் கேது, கேந்திர பலம் பெற்று ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில் ராசிநாதன் குருவின் 5 ம் பார்வையும் அங்கே பதிவதால் செய் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதுடன் ஒரு சிலருக்கு புதிய பொறுப்பும் வரும். குரு பகவானின் பார்வை 12 ம் இடத்திற்கு உண்டாவதால் வீடு, இடம் வாங்குவதற்காக செலவு ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். தன, குடும்ப ஸ்தானத்திற்கும் குருவின் பார்வை உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும் செய்துவரும் தொழிலில் லாபம் தோன்றும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான செவ்வாய் மாதத்தின் பிற்பகுதியில் 6 ம் இடத்தில் குருவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். உடலை வாட்டிக் கொண்டிருக்கும் நோய் விலகும். நம்பிக்கையோடு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். சுக ஸ்தானத்தில் போகக்காரகன் சஞ்சரிப்பதால் மனதில் ஆசை அதிகரிக்கும். தவறான எண்ணங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். முயற்சி ஸ்தானாதிபதி வக்கிரம் அடைந்திருப்பதால் செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவதால் தேர்வு நேரத்தில் அது உங்களுக்கு வெற்றியை உண்டாக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக. 3,4.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21,25,30. ஆக. 7,12.
பரிகாரம்: செல்வ கணபதியை வழிபட நன்மை உண்டாகும்.
பூராடம்: வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு,ஆடி மாதம் நன்மையான மாதமாக இருக்கப்போகிறது. ருண ரோக சத்ரு ஸ்தானமான 6 ம் இடத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான செவ்வாய், அங்கு சஞ்சரிக்கும் குருவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் குரு மங்கள யோகம் உண்டாகி எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் திறமை அதிகரிக்கும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு குறையும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரனின் சஞ்சார நிலைகளால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். பொன் பொருள் சேரும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். சூரியனால் செயல்களில் தடை, உடல்நிலையில் பின்னடைவு, உத்தியோகத்தில் நெருக்கடி ஏற்படும். வியாபாரிகளுக்கு அரசு வழியில் சில நெருக்கடி ஏற்படும். இந்த சமயத்தில் குருவின் பார்வை உங்கள் நிலையைப் பாதுகாக்கும். குடும்பத்தில் ஒற்றுமை வலுப்பெறும். எதிர்பார்த்த பணவரவை வழங்குவார். செய்துவரும் தொழிலில் லாபத்தை ஏற்படும். பணியிடத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். இக்காலத்தில் எந்த ஒன்றிலும் குழப்பத்திற்கு ஆளாகாமல் செயல்பட்டு நினைத்ததை நினைத்தபடி நடத்துவீர்கள். நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஆக. 4,5.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21,24,30. ஆக. 3,6,12,15.
லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.
உத்திராடம் 1 ம் பாதம்: பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, ஆடி மாதம் சிந்தித்து செயல்பட வேண்டிய மாதமாகும். நட்சத்திர நாதன் சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்றிருப்பதால் மேற்கொள்ளும் முயற்சியில் தடையும், தாமதமும், தேவையற்ற பிரச்னையும் உண்டாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலையில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். வியாபாரிகளுக்கு சட்டரீதியாக சில சிக்கல் தோன்றும் என்பதால் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். இந்த நேரத்தில் 6 ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லாவற்றையும் சமாளிக்கும் நிலையும் உண்டாகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலம் இழந்து விடுவர். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர் விலகிச் செல்வர். வழக்கு விவகாரம் சாதகமாகும். ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். தைரியமும் துணிச்சலும் உண்டாகி நினைத்ததை சாதிப்பீர். உங்கள் ராசிநாதன் குருவின் பார்வையால் தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும். மறுபக்கம் எதிர்பாராத செலவு உண்டாகும். ஒரு சிலர் புதிய சொத்து, வாகனம் என வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை பலப்படும். வரவு அதிகரிக்கும். எதிர்வரும் செலவுகளை உங்களால் சமாளிக்க முடியும். எத்தனைப் பிரச்னை ஏற்பட்டாலும் அதிலிருந்து உங்களால் விடுபட முடியும். புதிய முயற்சிகளில் மட்டும் கவனமாக இருப்பதுடன், மற்றவரை நம்பி எந்த ஒரு செயலையும் ஒப்படைக்காமல் நீங்களே மேற்கொள்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வரும். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: ஆக. 5.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19,21,28,30. ஆக.1,3,10,12.
பரிகாரம் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்வதால் நன்மை உண்டாகும்.