பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
01:07
உத்திராடம் 2,3,4 ம் பாதம்: எதையும் வெளிப்படையாகப் பேசி வாழும் உங்களுக்கு, ஆடி மாதம் யோகமான மாதமாக இருக்கும். தன ஸ்தானத்தில் பாத சனியாக சஞ்சரித்த உங்கள் ராசிநாதன் வக்கிரம் அடைந்திருப்பதால் குடும்பத்திலிருந்த சங்கடம் விலகும். பண வரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றக்கூடிய நிலை உண்டாகும். குரு பகவானால் உங்கள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு. ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதுவரை உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். குலதெய்வ அருள் ஏற்படும். தொழில், வியாபாரம் லாபம் அடையும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பணியில் இருப்பவரின் கோரிக்கை நிறைவேறும். புதிய தொழில் தொடங்க, வெளிநாடு செல்ல எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். முயற்சி இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் செயல் யாவும் வெற்றியாகும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை இக்காலத்தில் அடைவீர். வெளிநாட்டு முயற்சி லாபதை ஏற்படுத்தும். திருமண வயதினருக்கு வரன் வரும். பாக்ய ஸ்தானத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் தெய்வ வேண்டுதலை நிறைவேற்றுவீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வரவேண்டிய பணம் வரும். பெரியோர் ஆதரவு உண்டாகி நினைத்ததை சாதிக்கும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி, பொறுப்பு என்று நிலை உயரும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக. 6.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17,19,26,28. ஆக. 8,10.
பரிகாரம்: நெல்லையப்பரை வழிபட நன்மை அதிகரிக்கும்.
திருவோணம்: பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, ஆடி மாதம் முயற்சியால் முன்னேற்றம் காணும் மாதமாக இருக்கும். யோகக்காரகன் ராகு, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை வெற்றியாக்குவார். தைரியமாக செயல்பட வைத்து, மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளை முடிக்க வைப்பார். உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிப்பார். நினைத்துப்பார்க்க முடியாத இடத்திற்கு உங்களை உயர்த்துவார். வெளிநாட்டு முயற்சிகளை வெற்றியாக்குவார். ஒரு சிலருக்கு அடிக்கடி விமான பயணத்தை ஏற்படுத்துவார். குரு பகவான் உங்கள் கனவுகளை நனவாக்குவார்.வெளியிட செல்வாக்கை பன்மடங்காக உயர்த்துவார். பட்டம் பதவி புகழ் உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலை நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு ஊர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பணம் பல வழிகளிலும் வரும். கடன் அடைபடும். அருகிலுள்ள கோயில்களில் நீங்களே முன் நின்று திருப்பணிகளை நடத்துவீர். தொழில், வியாபாரம் விருத்தியாகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ஒரு சிலர் மேற்கல்விக்காக வெளிநாடு, வெளி மாநிலம் என செல்வார்கள்.
சந்திராஷ்டமம்: ஆக. 6,7.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17,20,26,29. ஆக. 2,8,11.
பரிகாரம் காஞ்சி காமாட்சி அம்மனை வழிபட வளமுண்டாகும்.
அவிட்டம் 1, 2 ம் பாதம்: உண்மையை உணர்ந்து வாழ்கின்ற உங்களுக்கு, ஆடி மாதம் முயற்சியின் அளவிற்கு முன்னேற்றம் காணும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் 5 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகளில் வேகம் இருக்கும் என்றாலும் நிதானித்து செயல்படுவது நல்லது. பூர்வீக சொத்துகளில் சில பிரச்னை தோன்றும். அதில் அவசரப்பட வேண்டாம். குருபகவான் அங்கே இணைந்திருப்பதால் எல்லாம் நன்மையில் முடியும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் பிரச்னை காணாமல் போகும். தடைகளை எல்லாம் தாண்டி நினைத்ததை சாதிக்க முடியும். வாழ்க்கையில் இருந்த நெருக்கடி, உடல் நிலையில் உண்டான பாதிப்பு முழுமையாக விலகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வரும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களுக்கு நல்ல தகவல் வரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். புதிய சொத்து சேரும். கோயில் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர். மாணவர்களின் மேற்படிப்பு கனவு நனவாகும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னை விலகும். விஐபிகள் ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் நினைப்பதை நினைத்தபடி செய்து கொள்வீர். எல்லா வகையிலும் உங்கள் செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.
சந்திராஷ்டமம்: ஆக. 7.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17,18,26,27. ஆக. 8, 9.
பரிகாரம் நரசிம்மரை வழிபடுவதால் நன்மை உண்டாகும்.