பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
01:07
அவிட்டம் 3,4 ம் பாதம்: சாமர்த்தியமாக சூழலுக்கு ஏற்றவாறு செயல்படும் உங்களுக்கு, ஆடி மாதம் நன்மையான மாதம். உங்கள் ராசிக்குள் சஞ்சரித்துவரும் சனி வக்கிரமடைந்திருப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். குழப்பம் மறையும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட சிக்கல் நீங்கி லாபமடையும். தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை சீராகும். குரு பகவான் பார்வை ஆயுள் ஸ்தானத்தில் பதிவதால் உங்களை பயமுறுத்திக் கொண்டிருந்த நோய் விலகும். 7 ம் பார்வையாகவும் பதிவதால் நீங்கள் செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதிக்குரிய வேலை அமையும். புதிய இடம், வாகனம், நகை வாங்குவது என செலவு அதிகரிக்கும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சர்ப்ப கிரகம் சஞ்சரிப்பதால் உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் வார்த்தைகளில் நிதானம் அவசியம். நியாயமான வரவு மட்டுமே உங்களிடம் தங்கும். முறைகேடான சம்பாத்தியம் உங்கள் வாழ்க்கையை முடக்கும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். 5 ம் அதிபதி, வித்யாகாரகன் புதன் வக்கிரம் அடைவதால் மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: ஆக. 8.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17,18,25,27. ஆக. 9.
பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட குறை அனைத்தும் விலகும்.
சதயம்: நடப்பதெல்லாம் கர்ம வினை என்பதை உணர்ந்து, நிதானமாக செயல்படும் உங்களுக்கு, ஆடி மாதம் அதிர்ஷ்டகரமான மாதம். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேதுவால் துன்பங்களுக்கு ஆளாகி வரும் உங்களுக்கு குருவின் பார்வை மாற்றத்தை உண்டாக்கும். உங்கள் திறமை வெளிப்படும். தொழில் ஸ்தானத்திற்கும் குருவின் பார்வை உண்டாவதால் தொழிலில் இருந்த தடை விலகி முன்னேற்றம் உண்டாகும். இந்த நிலையில் ராஜ கிரகமான சூரியன் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலை மேம்படும். நீண்டகால பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படும். வரவேண்டிய பணம் வரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். வழக்கு விவகாரம் சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு அதிகரிக்கும். எதிரிகள் காணாமல் போவார். இம்மாதம் எல்லாவற்றிலும் நன்மை அதிகரிக்கும். ஜென்மராசிக்குள் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்கிரமடைந்திருப்பதால் நெருக்கடி குறையும். வாழ்க்கைத் துணைக்கு ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்கள் செல்வாக்கை மறைக்க நினைத்தவரின் செயல் பலிக்காமல் போகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். கூட்டுத்தொழில் இனி லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: ஆக.8,9.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 22, 26, ஆக. 4,13.
பரிகாரம்: இசக்கியம்மனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்: அறிவாற்றலால் வெற்றி பெரும் உங்களுக்கு, ஆடி மாதம் நன்மையான மாதம். ராகு, கேது, குரு, செவ்வாய் கிரகங்கள் நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்தாலும், சூரியன் உங்கள் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்துவார். இக்காலத்தில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். நினைப்பதெல்லாம் நடக்கும். உடல்நிலையை சங்கடப்படுத்திக் கொண்டிருந்த நோய் விலகும். உற்சாகமுடன் செயல்படுவீர். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் உற்பத்தி உயரும். விற்பனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் போன்றவற்றில் உண்டான தடை விலகும். வழக்கு சாதகமாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தைரியமாக செயல்படத் தொடங்குவீர். குருவின் பார்வை அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானத்திற்கு உண்டாவதால் செல்வாக்கு வெளிப்படும். புதிய சொத்து, வாகனம் என்ற விருப்பம் நிறைவேறும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அரசு வழியிலான முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். அரசியல் வாதிகளுக்கு புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். விவசாயிகள் எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. படிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்பவர்கள் அங்குள்ள நிலையை நன்றாக அறிந்து கொண்டு செல்வது நல்லது.
சந்திராஷ்டமம்: ஆக. 10.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17,21,26, 30. ஆக. 3,8,12.
பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.