பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
01:07
பூரட்டாதி 4 ம் பாதம்: தெளிந்த ஞானம் கொண்ட உங்களுக்கு ஆடி மாதம் முயற்சிகளால் முன்னேற்றம் காணும் மாதமாக இருக்கும். உங்கள் ராசிநாதனின் சஞ்சார நிலை சாதகமாக இல்லை என்றாலும் அவருடைய பார்வை சப்தம, பாக்ய, இலாப ஸ்தானங்களில் உண்டாவது யோகம். மனதில் சங்கடம். குடும்பத்தில் குழப்பம். நட்புகளால் சோதனை என்றிருந்த நிலை யாவும் மாறும். பெரிய அளவில் முதலீடு செய்தும் எதிர்பார்த்த வருவாய் வரவில்லையே என வருந்துபவர்களின் நிலை மாறும். வரவேண்டிய பதவி உயர்வு வரவில்லை, கிடைக்க வேண்டிய இடமாற்றம் கிடைக்கவில்லை என்பவருக்கு மாற்றம்
கிடைக்கும். வாழ்வில் எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லை, தெய்வம் நமக்கு கண் திறக்கவில்லை என வருந்துபவர்களுக்கு குலதெய்வ அருளும் இஷ்ட தெய்வ அனுக்கிரகமும் இப்போது உண்டாகும். கோயில் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர். உங்கள் மனதில் புதிய உற்சாகம் தோன்றும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவர். எதிர்பார்த்த பணம் வரும். கடன் அடையும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விரயஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி வக்கிரம் அடைந்திருப்பதால் செலவு கட்டுக்குள் வரும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மூன்றாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி யாவும் வெற்றியாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடம் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக. 10.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21,30. ஆக. 3,12.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரட்டாதி: திடமான சிந்தனையுடன் முன்னேற்றம் கண்டுவரும் உங்களுக்கு, ஆடி மாதம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் மாதமாக இருக்கும். விரய ஸ்தானத்தில் ஏழரை சனியாக சஞ்சரித்து வரும் உங்கள் நட்சத்திரநாதன் வக்கிரமடைந்திருப்பதால் விரயச்செலவு கட்டுப்படும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். இனி நிம்மதி அடைவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். 3 ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதனுடன் தனாதிபதியும் பாக்யாதிபதியுமான செவ்வாயும் இணைந்து சஞ்சரிப்பதால் குரு மங்கள யோகம் உண்டாகி கனவுகளை நனவாக்குவர். பல முயற்சிகளை மேற்கொண்டும் நிறைவேறாமல் போன வேலை இனி விறுவிறுவென நடந்தேறும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக பூர்த்தியாகும்.கோயில் வழிபாட்டிலும், குல தெய்வ வழிபாட்டிலும் மனம் செல்லும். குடும்பத்தில் இருந்த பிரச்னை, சங்கடம் விலகும். விலகிச்சென்றவர் மீண்டும் உங்களைத்தேடி வருவர். திருமண வயதினருக்கு வரன் வரும். மறுமணம் முயற்சி மேற்கொண்டோருக்கு விருப்பப்பட்ட துணை அமையும். தடைப்பட்டிருந்த பணம் இப்போது வரும். பெரியோரின் ஆசீர்வாதம் உண்டாகும். 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் நீங்கள் நினைத்ததை சாதித்துக்கொள்ளும் நிலை ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு வருவாய் உயரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும். ஒருசிலர் கல்விக்காக வெளிநாடு, வெளி மாநிலம் என செல்வீர்கள்.
சந்திராஷ்டமம்: ஆக. 10,11.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17,21,26,30. ஆக. 3,8,12.
பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டால் முயற்சி வெற்றியாகும்.
ரேவதி: படிப்பறிவும் பட்டறிவும் கொண்ட உங்களுக்கு ஆடி மாதம் நினைப்பது நிறைவேறும் மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் புதன் வக்கிரமடைந்தாலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் திட்டமிட்டு செயல்படுவீர். நீங்கள் ஈடுபடும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். இதுவரை உண்டான படிப்பினைகளை வைத்து முன்னேற்றத்திற்கு வழி காண்பீர். பண வரவு அதிகரிக்கும். பொன்னும் பொருளும் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் உண்டாகும். குலதெய்வ வழிபாட்டால் குறை தீரும். இந்த நேரத்தில் உங்கள் ராசிநாதன் குருவின் பார்வைகளால் திருமண வயதினருக்கு வரன்வரும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். டைவர்ஸ் வரையில் சென்றவர்கள் மனம் மாறுவர். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். பெரியோரின் ஆதரவு சங்கடங்களைப் போக்கும். 11 ம் இடத்திற்கு குருவின் பார்வை உண்டாவதால் நட்புகளால் உங்கள் விருப்பம் நிறைவேறும். ஒரு சிலர் மறுமணத்திற்குரிய முயற்சியை மேற்கொள்வீர். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். நியாயமான செயல்களில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்கிரம் அடைந்திருப்பதால் செலவு கட்டுப்படும். காணாமல் போன பொருள் கைக்கு வரும். பண நெருக்கடி விலகும். முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் செயல்கள் வெற்றியாகும். காவல்துறையினருக்கு முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள் நிலை உயரும். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் கனவு நனவாகும். படிப்பில் கவனம் செல்லும்.
சந்திராஷ்டமம்: ஆக. 11,12.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21,23,30. ஆக. 3,5,14.
பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.