பதிவு செய்த நாள்
13
ஆக
2024
03:08
அசுவினி: நினைத்ததை நினைத்தபடி நடத்தும் மாதமானது இந்த ஆவணியில் நட்சத்திரநாதன் உங்களுக்கு முன்னேற்றத்தை வழங்குவார். உடல்நிலையில் உற்சாகம் தோன்றும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் விருத்தியாகும். உங்களிடமிருந்து போட்டியாளர் விலகுவார். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். நீண்ட கால வழக்கு சாதகமாகும். தன ஸ்தான குருவால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். செய்துவரும் தொழிலில் நேரிடையாக கவனம் செலுத்துவீர்கள். பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சுக்கிர பகவானால் வாய்ப்புகள் குவியும். புதிய வாகனம் வாங்குவீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வேலைக்காக எதிர்பார்த்தவருக்கு நல்ல தகவல் வரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். உடல்நிலை சீராகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இருக்கும். விவசாயிகள் பணியில் கவனம் தேவை. பின்னர் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரிகள் விற்பனையில் கூடுதல் முயற்சி எடுத்து லாபம் நிலைக்கு உயருவார்கள்.
சந்திராஷ்டமம்: செப். 9,10.
அதிர்ஷ்ட நாள்: ஆக.18,25,27. செப். 7,16.
பரிகாரம் பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.
பரணி: எண்ணத்தில் துணிவும், செயலில் தெளிவும் கொண்ட உங்களுக்கு ஆவணி மாதம் யோகமான மாதம். நட்சத்திர நாதன் சுக்கிரனால் வரவு அதிகரிக்கும். தடைப்பட்ட வேலை நடக்கும். நீங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். குருவும் செவ்வாயும் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதும் உங்களுக்கு யோகத்தை உண்டாக்கும். செயல்களை ஆதாயமாகும்.செல்வாக்கு உயரும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். பெண்களின் நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். உடல்நிலை சீராகும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும். வேலையில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் செல்வாக்கு உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பும் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். போட்டி, பிரச்னை என்ற நிலை மாறி இழுபறியான வெற்றி ஏற்படும். பணவரவில் இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் குறையும். ஒரு சிலர் குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றி வருவீர்கள்.
சந்திராஷ்டமம்: செப்.10,11
அதிஷ்ட நாள்: ஆக. 18,24,27. செப். 6,9,15.
பரிகாரம் பிரத்தியங்கிராவை வழிபட பிரச்னை விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
கார்த்திகை 1 ம் பாதம்: எந்த இடத்திலும் முதன்மையாக நின்று, செய்ய நினைக்கும் வேலைகளை துணிச்சலுடன் செய்யும் உங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் முழுவதும் நட்சத்திர நாதனால் உயர்நிலையை உயரும். குலதெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். பூர்வீக சொத்து விவகாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தைரியமும் துணிச்சலும் உண்டாகும். முயற்சியில் லாபம் தோன்றும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். மாதத்தின் முற்பகுதியில் பொன் பொருள் சேரும். கேதுவால் எதிர்ப்பு இல்லாமல் போகும். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர். பணிபுரியும் இடத்தில் இருந்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச்செல்வீர்கள். குருவின் பார்வை உண்டாவதால் ஆரோக்கியம் சீராகும் வழக்கத்தைவிட துணிச்சலாக, தைரியமாக செயல்படுவீர். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்தோரின் கனவு நனவாகும். எதிர்பார்த்த தகவல் வீடு தேடிவரும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தோரின் விருப்பம் நிறைவேறும். விவசாயத்தில் அக்கறை அதிகரிக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: செப்டம்பர் 11.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 18,19,27,28. ஆக. 1,9,10.
பரிகாரம்: நவக்கிரக வழிபாட்டால் நன்மை உண்டாகும்.