ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் செப்பு தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2024 02:07
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி சுவாதி உற்ஸவத்தை முன்னிட்டு செப்பு தேரோட்டம் நடந்தது. நேற்று காலை 7:20 மணிக்கு கோயிலில் இருந்து செப்பு தேருக்கு பெரியாழ்வார் எழுந்தருளினார். கோவிந்தா, கோபாலா கோஷத்திற்கு மத்தியில் தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கோயில் யானை முன் செல்ல தேர் நான்கு ரத வீதிகள் சுற்றி வந்து ஒரு மணி நேரத்தில் நிலையம் அடைந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பட்டர்கள், செயல் அலுவலர் லட்சுமணன், அறநிலைத்துறையினர் செய்திருந்தனர். மாலை 6:00 மணிக்கு மணவாள மாமுனிகள் சன்னதியில் இருந்து ஸ்ரீ சடகோபராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமையில் பக்தர்கள் பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடல்கள் பாடி ஊர்வலமாக மாடவீதி சுற்றி வந்தனர்.