ஆடி முதல் நாள்; அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2024 10:07
ஆடி முதல் நாள்; அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்
கோவை ; தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கியது. இந்நாளில் கோயில், முன்னோர் வழிபாடு செய்தால் நற்பலன் உண்டாகும். ஆடி அம்மனுக்கு உரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடி மாதப்பிறப்பு மற்றும் ஆடி செவ்வாய் கிழமையை முன்னிட்டு, அம்மன் கோயிலில் பெண்கள் அதிக அளவில் அம்பாளை வழிபட்டனர். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் விஷேமானது என்பதால் அம்பாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் பெண்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அனைத்து அம்மன் கோயில்களிலும் இன்று ஆடி முதல் நாளை முன்னிட்டு காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பெண்கள் எலுமிச்சம் பழங்களில் பசுநெய் மற்றும் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டனர்.
ஆடி மாதம் பிறந்ததையொட்டி கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் தெரு எண்.08 ல் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது.இதில் வெள்ளி கவசத்துடன் சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனர்.