மடப்புரம் காளி கோயிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2024 10:07
திருப்புவனம்; திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி மாதங்களில் பக்தர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயரும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அம்மனை தரிசிக்க பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். இன்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்ல உள்ள நிலையில் பக்தர்கள் பாதுகாப்பாக அம்மனை தரிசனம் செய்ய கோயில் உள்ளேயும், வெளியேயும் சவுக்கு கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் வரிசையில் நிற்காமல் உடனுக்குடன் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆடி மாதம் வரும் பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கை செலுத்த வசதியாக ஆங்காங்கே தற்காலிக உண்டியலும் அமைக்கப்பட்டுள்ளது.