Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை வைகை ஆற்றில் தீர்த்தம் ... ஆடி தரிசனம்; நினைத்ததை நடத்தி காட்டும் காட்டுப் பொன்னியம்மன்! ஆடி தரிசனம்; நினைத்ததை நடத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
டில்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதில் அறக்கட்டளை உறுதி
எழுத்தின் அளவு:
டில்லியில் கேதார்நாத் கோவில் கட்டுவதில் அறக்கட்டளை உறுதி

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2024
05:07

இப்ராஹிம்பூர்; ‘கேதார்நாத் கோவிலை கட்டுவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. சட்ட நடவடிக்கை அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயார்’ என, டில்லி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.


கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புனிதத் தலங்களை சார் தாம் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒன்றான கேதார்நாத் புனித கோவிலைப் போன்று டில்லியில் அச்சு அசலாக கோவில் கட்ட ஸ்ரீகேதார்நாத் தாம் டில்லி அறக்கட்டளை முடிவெடுத்தது. இந்த திருப்பணிக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த அறக்கட்டளை. கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இம்மாத துவக்கத்தில் நடைபெற்றது. இதுபற்றிய அறிவிப்பு வெளியானதும், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் – கேதார்நாத் கோவில் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து, அறக்கட்டளையின் நிறுவனர் சுரேந்திர ரவுடேலா நேற்று கூறியதாவது: இங்கு கேதார்நாத் கோவிலின் பிரதியைக் கட்டுவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. தேவைப்பட்டால் சட்டப் போராட்டத்துக்குத் தயாராக இருக்கிறோம். குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக, எங்கள் அறக்கட்டளையின் பெயரிலிருந்து ‘தம்’ என்ற வார்த்தையை நீக்க முடிவு செய்துள்ளோம். ஆனால் இங்குள்ள பக்தர்களுக்காக கோவில் கட்டுவதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. கேதார்நாத் கோவிலைப் போன்றே மாதிரிக்கோவிலைக் கட்டிய முதல் நபர்கள் நாங்கள் அல்ல. இந்துார், மும்பையில் அதேபோன்ற கோவில்கள் உள்ளன. அவர்கள், சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பினால், அனைவருக்கும் எதிராக அதைச் செய்ய வேண்டும். நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. ஹிந்துக்களுக்கும், சனாதன தர்மத்திற்கும் நாங்கள் நல்ல பணிகளைச் செய்து வருகிறோம். சட்டச் சவாலைப் பொருட்படுத்தாமல் கோவில் கட்டுவதைத் தொடருவோம். டில்லியில் கேதார்நாத் கோவில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் தயாராகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்; திருப்பூர் பகுதியில் நேற்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.மகாபலி சக்ரவர்த்தி ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் திருவோணத்தை முன்னிட்டு வாமனர் சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வளர்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
 பழநி; பழநி திருஆவினன்குடி கோயில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு சங்காபிஷேகம், யாக பூஜை நடந்தது. 108 ... மேலும்
 
temple news
கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar