பதிவு செய்த நாள்
14
நவ
2012
04:11
அழகை ஆராதிக்கும் மனம் கொண்ட கன்னிராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், சூரியன், ராகு, குரு செயல்படுகின்றனர். இதனால் மனதில் நம்பிக்கையும் செயலில் ஆர்வமும் அதிகரிக்கும். வாக்கு ஸ்தானத்தில் உள்ள சுக்கிரனால் வசீகரத்தன்மையை உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வருமானம் அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்பு உருவாகும். இளைய சகோதரர்களிடம் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வீர்கள். தாயின் உடல்நலத்திற்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். புத்திரர் பிடிவாத குணத்துடன் செயல்பட்டு வருவர். தக்க அறிவுரையால் அவர்களை நல்வழிப்படுத்துவீர்கள். பூர்வசொத்தில் வருமானம் சீராக இருக்கும். பசு, பால் பாக்ய யோக பலன் உண்டு. ஆரோக்கியம் பெற சத்து நிறைந்த உணவு, சீரான ஓய்வு கைகொடுக்கும். தம்பதியர் குடும்பத்தின் எதிர்கால நலன் சிறக்க தேவையான நடவடிக்கையில் ஆர்வம் காட்டுவர். குடும்ப செலவுக்கான பணவசதி சீராகக் கிடைக்கும். தொழிலதிபர்கள் தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் தொழில் வளர்ச்சி காண்பர். உற்பத்தி சிறந்து தாராள பணவரவை பெற்றுத்தரும். வியாபாரிகள் புதிய உத்திகளால் வியாபாரத்தில் நல்லமுறையில் பிக்அப் ஆகும். விரிவாக்கப்பணியிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவர். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெறுவர். குடும்ப பெண்கள் கணவரின் ஆலோசனைகளை ஏற்று நடந்து குடும்ப வளர்ச்சிக்கு வழிவகுப்பர். ஆடை, ஆபரணச்சேர்க்கை அவரவர் வசதிக்கேற்ப கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் சக பணியாளர்களின் ஆலோசனை பெற்று குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். சுயதொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்த நிதியுதவி கிடைத்து வளர்ச்சிப்பணியில் ஈடுபடுவர். உற்பத்தி, விற்பனை சிறந்து வருமானம் கூடும்.அரசியல்வாதிகள், எதிரி வியக்கும் வகையில் வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவர். விவசாயிகள் மகசூல் சிறந்து ஆதாயத்தை அதிகரிப்பர். மாணவர்கள் பொழுதுபோக்கை குறைத்து படிப்பில் அக்கறை செலுத்துவர்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் புதிய முயற்சிகளில் வெற்றி அதிகரிக்கும்.
உஷார் நாள்: 25.11.12 காலை 8.34 முதல் 27.11.12 மாலை 7.25 வரை
வெற்றி நாள்: நவம்பர் 16, டிசம்பர் 12, 13
நிறம்: ரோஸ், மஞ்சள் எண்: 3, 7