உங்கள் ராசிக்கு நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். மனதில் மகிழ்ச்சியும் செயல்களில் உத்வேகமும் நிறைந்திருக்கும். வாழ்வில் அமோகநிலை காண்பீர்கள். அரசு தொடர்பான எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி செய்யும் நிர்பந்தம் உண்டாகும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புத்திரர் கவனக்குறைவான செயல்களால் உடல் நல பாதிப்பு அடைவர். மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நேரிடும்.வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும். இஷ்டதெய்வ வழிபாடு நிறைவேறும். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையுடன் நடந்துகொள்வர். சுபநிகழ்ச்சி குறித்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.தொழிலதிபர்கள் உற்பத்தி, தரத்தின் அளவை அதிகரிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்வர். உற்பத்தி, தரம் சிறந்து புதிய ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் மூலதனத்தை அதிகப்படுத்தி அபிவிருத்தி பணியை மேற்கொள்வர். விற்பனை சீராகி ஆதாயம் உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி பணியிலக்கை நிறைவேற்றுவர். தேவைகளை நிறைவேற்றும் விதத்தில் வருமானம் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் புதிய உத்திகளை பின்பற்றி பணியில் உள்ள தேக்கநிலையை சரிசெய்வர். குடும்ப பெண்கள் குடும்பச் செலவுக்கான பணம் குறைவின்றி கிடைக்கப் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் சந்தை நிலவரத்திற்கேற்ப செயல்பட்டு வருவர். புதிய ஆர்டர் கிடைக்கப் பெற்று வருமானம் உயரும். அரசியல்வாதிகள் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவர். விவசாயிகள் விளைபொருளுக்கு நல்ல விலை காண்பர். கால்நடை வளர்ப்பில் ஆதாயம் உண்டு. மாணவர்கள் அக்கறையுடன் படிப்பதால் எதிர்பார்த்த தரதேர்ச்சி கிடைக்கும்.
பரிகாரம்: மீனாட்சியை வழிபடுவதால் தொழிலில் பன்மடங்கு லாபம் கிடைக்கும். உஷார் நாள்: 22.11.12 இரவு 11.52 முதல் 25.11.12 காலை 8.33 வரை வெற்றி நாள்: டிசம்பர் 9, 10, 11 நிறம்: சிவப்பு, வெள்ளை எண்: 1, 2
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »