பதிவு செய்த நாள்
14
நவ
2012
04:11
நியாய தர்மத்தை பின்பற்றும் துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு சுக்கிரன், செவ்வாய் அனுகூலம் தரும் விதத்தில் உள்ளனர். இரண்டாம் இடத்தில் உள்ள சூரியன் ராகு சேர்க்கையால் செயல் நிறைவேறுவதில் தாமதமும், தாறுமாறான செலவும் உண்டாகும். கண்களுக்கு தகுந்த ஓய்வு கொடுப்பதால் கண் நோய் வராமல் தவிர்க்கலாம்.இடம், சூழ்நிலை கருதி பேசுவது அவசியம். இல்லாவிட்டால் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக இடமுண்டு. தாயின் தேவையை நிறைவேற்றி வருவீர்கள். புத்திரர் படிப்பில் உயர்வதற்கான வழி வகையை மேற்கொள்வீர்கள். பூர்வ சொத்தில் மிதமான வருமானம் கிடைக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து குடும்ப நன்மைக்கு வித்திடுவர். வெளியூர் பயணத்தைப் பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது. தொழிலதிபர்கள் கவனமுடன் செயல்பட்டு உற்பத்தி, விற்பனையை சீராக்குவர். பணியாளர்களின் ஒத்துழைப்பு துணைநிற்கும். வியாபாரிகள் சந்தை நிலவரத்திற்கேற்ப நடைமுறை சீர்திருத்தங்களை மேற்கொள்வர். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை ஓரளவு நிறைவேற்றுவர். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றினால் குளறுபடி வராமல் தவிர்க்கலாம். சலுகைகள் கேட்பதில் நிதான அணுகுமுறை நல்லது. குடும்ப பெண்கள் கணவரின் பணவரவுக்கேற்ப சிக்கனத்தை பின்பற்றினால் செலவைக் கட்டுப்படுத்தலாம். முக்கியத் தேவைக்கு வங்கி சேமிப்பு பயன்படும். பணிபுரியும் பெண்கள் நம்பிக்கையுடன் செயலாற்றி பணியிலக்கை நிறைவேற்றுவர். சகபணியாளர்களுக்காக பணப்பொறுப்பு ஏற்பது கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் உற்பத்தி, விற்பனையை சீராக்குவர். பணவரவில் திருப்திகரமான நிலை நிலவும்.அரசியல்வாதிகள் விவகாரங்களில் கவனம் கொள்வதை தவிர்த்து வளர்ச்சிப்பணியில் ஈடுபடுவதால் நற்பெயர் கிடைக்கும். விவசாயிகள் மி தமான மகசூலும் அதற்கேற்ப வருமானமும் காண்பர். மாணவர்கள் அன்றாடம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்தி கல்வியில் வளர்ச்சி காண்பர்.
பரிகாரம்: வெங்கடாஜலபதியை வழிபடுவதால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
உஷார் நாள்: 27.11.12 இரவு 7.26 முதல் 30.11.12 காலை 7.05 வரை
வெற்றிநாள்: நவம்பர் 17, 18, டிசம்பர் 14, 15
நிறம்: நீலம், ரோஸ் எண்: 1, 8.