இந்த மாதம் உங்கள் ராசிக்கு குரு, புதன், சூரியன், ராகு அனுகூல பலன் தரும் விதமாக செயல்படுகின்றனர். சாதுர்யமாகச் செயலாற்றி எதிலும் வெற்றி வாய்ப்பைப் பெறுவீர்கள். பேசுவதில் கடுமையைக் குறைத்து மென்மையைக் கடைபிடிப்பது நலம் தரும். வீடு, வாகனத்தில் தகுந்த பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம். அரசு தொடர்பான அனுகூலம் உண்டாகும். புத்திரர் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில் செயல்படுவர். புதிதாகச் சொத்து சேர்க்கை ஏற்பட வாய்ப்புண்டு. ஆரோக்கியம் பலம்பெறும். எதிரியால் இருந்த தொந்தரவு விலகும். அன்றாடப் பணிகளை சிறப்பான முறையில் செயல்படுத்துவீர்கள். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் விதத்தில் செயல்படுவது நல்லது. நண்பர்களிடம் அளவுக்கதிகமான உரிமை எடுப்பது கூடாது. தொழிலதிபர்கள் மூலதனத்தை அதிகப் படுத்தி வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி எதிர்பார்த்த அளவில் உயரும். புதிய ஒப்பந்தம் கிடைத்து லாபம் அதிகரிக்கும். வியாபாரிகள் சந்தை போட்டி குறைந்து திட்டமிட்ட இலக்கை அடைவர். புதிய உத்திகளால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பர். பணியாளர்கள் திறமையை வெளிப்படுத்தி பணி இலக்கை செவ்வனே நிறைவேற்றுவர். எதிர்பார்த்த சலுகைப்பயன் கிடைக்கும். குடும்ப பெண்கள் தாராள பணவசதி அமைந்து அன்றாட தேவைகளை சிறப்பாக நிறைவேற்றுவர். கணவரின் பேச்சுக்கு மதிப்பளித்து நடந்தால் குடும்ப ஒற்றுமை சீராக இருக்கும். பணிபுரியும் பெண்கள் உத்வேகமுடன் செயல்பட்டு பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். தாமதமான சலுகைப்பயன் எளிதாக கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையில் சிறந்து விளங்குவர். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்து மக்கள் பணிகளை விரைந்து நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து ஆதாயம் உயரும். மாணவர்கள் லட்சிய மனதுடன் படித்து எதிர்பார்த்த தரதேர்ச்சி காண்பர். பெற்றோரின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பர்.
பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபடுவதால் பொருளாதாரம் பன்மடங்கு உயரும். உஷார் நாள்: 5.12.12 அதிகாலை 2.54 முதல் 7.12.12 காலை 9.13 வரை வெற்றி நாள்: நவம்பர் 23, 24 நிறம்: பச்சை, வெள்ளை எண்: 5, 6
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »