பதிவு செய்த நாள்
14
நவ
2012
04:11
துணிச்சலுடன் செயலாற்றி வரும் கும்பராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு சுக்கிரன், சூரியன், செவ்வாய் நல்ல பலன் வழங்குகிற இடங்களில் உள்ளனர். மனதில் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். நிதானித்துப் பேசி நற்பெயரை பாதுகாத்துக் கொள்வீர்கள். வீடு, வாகன வகையில் பெறும் வசதி திருப்திகரமாக இருக்கும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். உடல் ஆரோக்கியத்துடன் திகழும். கடந்த காலத்தில் நிறைவடையாத பணிகளை தற்போது முடிப்பீர்கள். கடனில் பெரும் பகுதியை அடைக்கும் விதத்தில் வருமானம் வந்து சேரும். எதிரியின் கெடுதல் முயற்சி பலமிழந்து போகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசமுடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்களிடம் உதவி பெறுவீர்கள். தொழிலதிபர்கள் பணியாளர்களின் ஆதரவு கிடைத்து உற்பத்தி, தரத்தின் அளவை மேம்படுத்துவர். உபரி வருமானம் கிடைக்கும். வியாபாரிகள் கவர்ச்சிகரமான திட்டங்களை செயல்படுத்தி விற்பனையில் புதிய சாதனைகளை நிகழ்த்துவர்.
பணியாளர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். சலுகைப்பயன்கள் படிப்படியாகக் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் அன்பு மழையில் நனைவர். தாராள பணவசதி கிடைத்து குடும்பத் தேவை அனைத்தும் நிறைவேற்றுவர். பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் இருந்த குழப்பமான சூழலில் இருந்து விடுபடுவர். சகபணியாளர்களில் உதவி கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனையை உயர்த்துவதில் ஆர்வம் காட்டுவர். பணவரவு திருப்தி அளிக்கும். அரசு தொடர்பான உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகநலப்பணிகளை நிறைவேற்றி மக்கள் மத்தியில் புகழ்பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிப்பதோடு விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கும். மாணவர்கள் ஆர்வத்துடன் படித்து தரத்தேர்ச்சி காண்பர். பெற்றோர் பரிசுப்பொருட்களை வாங்கித் தருவர்.
பரிகாரம்: ரங்கநாதரை வழிபடுவதால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உஷார் நாள்: 7.12.12 காலை 9.14 முதல் 9.12.12 பிற்பகல் 1.25 வரை
வெற்றி நாள்: நவம்பர் 25, 26
நிறம்: ஆரஞ்ச், வாடாமல்லி எண்: 7, 8