உங்கள் ராசிக்கு சுக்கிரன், புதன், சனி ஆதாய ஸ்தானத்தில் இருந்து நற்பலன்களை வழங்குகின்றனர். கேதுவும் தன் பங்கிற்கு சிறந்த பலன்களைத் தருகிறார். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி திருப்திகரமாக இருக்கும். தாயின் அன்பு, ஆசியும் கிடைக்கப் பெறுவீர்கள். புத்திரர் தகுதி, திறமை வளர்த்து படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவர். பூர்வ சொத்தில் வருமானம் கூடும். புதிய சொத்து வாங்க அனுகூலம் உண்டு. உடல்நலம் சீராக இருக்கும். எதிரியால் தொந்தரவு அணுகாத சூழ்நிலை உருவாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து வருவர். குடும்பத்தேவை அனைத்தும் சீராக நிறைவேறும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியும் கலகலப்பும் உண்டாகும். தொழிலதிபர்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொள்வர். உற்பத்தி, விற்பனையில் நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் மூலம் பணவரவு அதிகரிக்கும். வியாபாரிகள் திட்டமிட்டபடி விரிவாக்கப் பணிகளில் ஈடுபடுவர். விற்பனை சிறந்து வருமானம் கூடும். பணியாளர்கள் உற்சாக மனதுடன் செயல்பட்டு பணி இலக்கை திறம்பட நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் கணவரின் நல்ல குணங்களை பாராட்டி மகிழ்வர். குடும்பத்தின் அத்தியாவசியத் தேவை நிறைவேற தாராள பணவசதி கிடைக்கும். மங்கல நிகழ்ச்சி இனிதே நிறைவேறும். பணிபுரியும் பெண்கள் ஆர்வமுடன் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து ஆதாயத்தை பெருக்குவர். நவீன தொழிற்கருவிகள் வாங்கும் திட்டம் நிறைவேறும். அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு விவசாயத்தேவைக்கான பணம் சீராக கிடைக்கும். பயிர் வளர்ச்சி திருப்தி தரும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் கொள்வர். தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்.
பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் வாழ்வில் அதிர்ஷ்டகரமான பலன் உண்டாகும். உஷார் நாள்: 2.12.12 மாலை 6.00 முதல் 4.12.12 பின்இரவு 2.53 வரை வெற்றி நாள்: நவம்பர் 21, 22 நிறம்: மஞ்சள், சிமென்ட் எண்: 3, 4
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »