குரு பூர்ணிமா; புட்டபர்த்தியில் பிரசாந்தி நிலையத்தில் குவிந்த பக்தர்கள்.. ‘குரு வந்தனம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2024 10:07
புட்டபர்த்தி; குரு பவுர்ணமியை ஒட்டி புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ஆண்டுதோறும் குரு பவுர்ணமியை ஒட்டி ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த வகையில் இந்தாண்டும் இன்று சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 8:00 மணிக்கு வேதம்; பிரசாந்தி பஜனை குழு சார்பில் 8:20 மணிக்கு, ‘குரு வந்தனா’; 9:00 மணிக்கு ஸ்ரீ சத்ய சாய் மைத்திய அறக்கட்டளை டிரஸ்டி ஸ்ரீ எஸ்.எஸ்.நாகானந்த் வரவேற்பு உரை நிகழ்த்தினார். பின், 9:10 மணிக்கு ஸ்ரீ சத்யசாய் சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் நிமிஸ் பாண்டியா உரை; 9:20 மணிக்கு, மாற்றுத்திறனாளி சேவை திட்டம் துவக்கம்; 9:25 மணிக்கு, சிறப்பு விருந்தினரான ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் கவர்னர் சிவ் பிரதாப் சுக்லா சிறப்புரை ஆற்றினார். 9:20 மணிக்கு தெய்வீக சொற்பொழிவு; 10:00 மணிக்கு பஜனை, தீபாராதனை நடைபெற்றது. மாலை 4:30 மணிக்கு வேதம்; 5:00 மணிக்கு, ரஞ்சனி காயத்திரி குழுவின் ஆன்மிக இசை நிகழ்ச்சி; 5:45 மணிக்கு பஜனை, தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. நிகழ்ச்சியை ஒட்டி, சாய் பிரசாந்தி நிலையத்தில் விழாக்கோலம் பூண்டுள்ளது. குல்வந்த் அரங்கம் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதிலும் இருந்து, சத்யசாய் பாபாவின் ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். முன் கூட்டியே குடும்பத்தினருடன் வந்துள்ள பக்தர்கள் சாய் பிரசாந்தி நிலையத்தில் தங்கி உள்ளனர்.