திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில், பால்குட ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஆடி மாத பவுர்ணமியையொட்டி, பொதுமக்கள், பக்தர்கள் வெள்ளாற்றிலிருந்து பால்குடம், தீர்த்த குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பக்தர்கள் எடுத்துவந்த பால்குடங்களை கொண்டு மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று அம்மனை வழிபாடு செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.