ஆடி முதல் செவ்வாய்; நத்தம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2024 06:07
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயிலில் ஆடி முதல் செவ்வாய்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.பின்னர் கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்க பூச்சொரிதல் விழா நடந்தது. அசோக்நகர், மீனாட்சிபுரம், தெலுங்கர் தெரு, கோவில்பட்டி, மாரியம்மன் கோயில் தெரு,கர்ணம் தெரு, செட்டியார்குளத்தெரு, காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கையில் பூதட்டுகளுடன் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.இதுப்போல் நத்தம் பகுதி அம்மன் கோயில்களிலும் ஆடி முதல் செவ்வாய்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.