கனவில் வந்த கணேசர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2024 11:07
கீழக்கரை; கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி செல்லும் வழியில் கனவில் வந்த கணேசர் கோயில் உள்ளது. நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மூலவர் கனவில் வந்த கணேசருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றியும் விநாயகர் துதி பாடல்களை பாடியும் பஜனை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.