Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கழனி மாரியம்மன் கோவிலில் ... அரசநகரி அழகு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா அரசநகரி அழகு முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதிலமடைந்த கோவில்களில் பராமரிப்பு; சொந்த செலவில் செய்யும் முஸ்லிம்
எழுத்தின் அளவு:
சிதிலமடைந்த கோவில்களில் பராமரிப்பு; சொந்த செலவில் செய்யும் முஸ்லிம்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2024
05:07

கர்நாடகாவின் ஒரு சில பகுதிகளில், ஹிந்து – முஸ்லிம்கள் இடையில் பிரச்னை இருந்தாலும், பெரும்பாலான இடங்களில் சகோதரத்துவத்துடன் இருக்கின்றனர். ஹிந்துக்கள் வீட்டில் நடக்கும் பண்டிகையில் முஸ்லிம்களும், முஸ்லிம் பண்டிகையில் ஹிந்துக்களும் கலந்து கொள்கின்றனர். சமீபத்தில் கூட மாநிலத்தின் பல கிராமங்களில் ஹிந்து – முஸ்லிம்கள் ஒன்றாக இணைந்து, மொகரம் பண்டிகை கொண்டாடினர். இந்நிலையில் முஸ்லிம் ஒருவர் சொந்த செலவில், சிதிலமடைந்த கோவில்களை பராமரித்து வருகிறார்.


கோவில் வரலாறு; மாண்டியா மாவட்டம், நாகமங்களாவை சேர்ந்தவர் முகமது கலிமுல்லா, 65. ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். பழங்கால ஹிந்து கோவில்கள் பற்றி அறிந்து கொள்வதில் முகமது கலிமுல்லாவுக்கு ஆர்வம் அதிகம். இதனால் வீட்டில் ஓய்வு நேரத்தின் போது, கணினியில் பழங்கால ஹிந்து கோவில்களின் வரலாற்றை தேட ஆரம்பித்து விடுவார். அப்படி வரலாற்றை தேடும்போது, நாகமங்களா அருகே தொட்டஜடுகா கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான சென்னகேஸ்வரா கோவில் இருப்பது அவருக்கு தெரிந்தது. இதனால், அந்த கோவிலுக்கு சென்றார். ஆனால் கோவில் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த கோவில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. கோவில் வளாகத்தில் நாய்களும், நாய்க்குட்டிகளும் வசித்தன.


விழிப்புணர்வு; இதையடுத்து, ஊர் பெரியவர்களை சந்தித்து பேசிய முகமது கலிமுல்லா, தர்மஸ்தாலா கிராம அபிவிருத்தி குழுவின் உதவியுடனும், தனது சொந்த பணத்திலும் சிதிலமடைந்த கோவிலை சீரமைத்து தருவதாக கூறினார். இதற்கு ஊர் பெரியவர்களும் சம்மதம் தெரிவித்தனர். அதன்பின், தனது சொந்த பணம் 25,000 ரூபாய் மற்றும் தர்மஸ்தாலா கிராம அபிவிருத்தி குழுவின் பணத்தில், கோவிலை புனரமைக்கும் பணிகளை முகமது கலிமுல்லா செய்தார். அவருக்கு கிராம மக்களும் உதவியாக இருந்தனர். இதேபோன்று, மேலும் மூன்று சிதிலமடைந்த கோவில்களையும், முகமது கலிமுல்லா சொந்த பணத்தில் புனரமைத்து கொடுத்தார். இதுகுறித்து முகமது கலிமுல்லா கூறுகையில், ‘‘பழங்கால கோவில்கள் நமது நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை எடுத்து காட்டுகிறது. அப்படி இருக்கும் கோவில்கள் பராமரிப்பு இன்றி சிதிலமடைவதை பார்க்க வேதனையாக உள்ளது. இதுவரை நான்கு கோவில்களை எனது சொந்த பணத்தில், புனரமைத்து கொடுத்து உள்ளேன். கோவில்களை பராமரிப்பதன் அவசியம் குறித்து, பள்ளி மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரம் பாடம் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்,’’ என்றார். – நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத ... மேலும்
 
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
கடலுார்; கடலுார் கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar