நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2024 03:07
காரைக்குடி; காரைக்குடியில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்தும் தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி முத்துராமலிங்கத் தேவர் நகரில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் 21 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா கடந்த ஜூலை 23 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. முக்கிய நிகழ்வாக இன்று காலை, முளைப்பாரி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், முத்தாலம்மன் கோயிலில் இருந்து பால்குடம், தீச்சட்டி எடுத்தும் அழகு புத்தியும் பறவை காவடி எடுத்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கோயில் முன்பு, ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.