ஆடி அமாவாசையை முன்னிட்டு அஞ்சலகத்தில் கங்கா நீர் விற்பனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2024 06:07
ராமநாதபுரம்; ஆடி அமாவாசையை முன்னிட்டு அஞ்சலகங்களில் ரூ.30க்கு புனித கங்கா நீர் விற்பனை செய்யப்படுகிறது.
ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீர்த்தாரப்பன் கூறியிருப்பதாவது: உத்திரகாண்ட் மாநிலம் கங்கோத்ரி மலையில் இருந்து புனித கங்கை நீரை எடுத்து சுத்திகரிப்பு செய்து நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியை அஞ்சல் துறை மேற்கொண்டுள்ளது. புதுமனை புகுவிழா, புதிய தொழில் துவங்குதல், சுப நிகழ்ச்சிகளுக்கு கங்கா புனித நீரை மக்கள் பயன்படுத்துகின்றனர். இதன்படி ஆக.4ல் ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம், பரமக்குடி தலைமை தபால் நிலையங்கள், முதுகுளத்துார், பார்த்திபனுார், ஆர்.எஸ்.மங்கலம், ராமேஸ்வரம் ஆகிய துணை தபால் நிலையங்களில் புனித கங்கை நீர் பாட்டில் ரூ.30க்கு விற்கப்படுகிறது. இதற்காக சிறப்பு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் அருகேயுள்ள அஞ்சலகங்களை அணுகி கங்கை நீர் வாங்கி பயன்பெறலாம் என்றார்.