கும்மிடிப்பூண்டியில் முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2024 06:07
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டியில் வள்ளி, தேவசேனா சமேத ஞானவேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு, மூன்று நாள் உற்சவம் நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று காலை சங்காபிஷேகமும், மாலையில் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மணக்கோலத்தில் காட்சியளித்த முருகனை வழிபட்டனர். தொடர்ந்து, ஞானவேல் முருகன் வீதியுலா சென்றார்.