திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆடிப்பூர விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2024 05:08
பண்ருட்டி; திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று ஆடிப்பூரம் முன்னிட்டு உற்சவர் பெருமாள், ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று ஆடிப்பூரம் முன்னிட்டு காலை 5:00 மணிக்கு நடைதிறப்பு, 7:00 மணிக்கு நித்யபடி பூஜை, 8:00 மணிக்கு உற்சவர் பெருமாள், ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 10:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பகல் 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, இரவு 7:00 மணிக்கு உற்சவர் பெருமாள் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.