பதிவு செய்த நாள்
07
ஆக
2024
05:08
திருப்போரூர்; திருப்போரூர் பிரணவமலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆடிப்பூர விழாவினை முன்னிட்டு, 108 பால்குட அபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. பெண்கள், பால் குடங்களை தலையில் சுமந்தபடி, விநாயகர் கோவிலிருந்து, கைலாசநாதர் கோவிலை வந்தடைந்தனர். அவர்கள் கொண்டுவந்த பால்குடங்களால், சுவாமிகளுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. அதேபோல், தண்டலம் ஊராட்சியில் உள்ள செல்லியம்மன் கோவிலிலும், பால்குட விழா நடந்தது. தண்டலம் ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள விநாயகர் கோவிலிருந்து பெண்கள் பால்குடங்களை சுமந்து புறப்பட்டு, செல்லியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அவர்கள் கொண்டுவந்த பால்குடங்களால், அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.