பதிவு செய்த நாள்
07
ஆக
2024
05:08
கடலுார்; கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. விழாவையொட்டி, பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மூலவர் பெரியநாயகி அம்மனுக்கு வளையல் அணிவித்து அலங்காரம், வளையல் பாவாடை அலங்காரம் செய்து, திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து கொலு மண்டபத்தில் உற்சவர் பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், வளைகாப்பு உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு வளையல், தாலி சரடு, மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு வளையல் பிரசாதம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து, சுவாமி உள்பிரகாரத்தில் வலம் வந்து, சிவகர தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.