பதிவு செய்த நாள்
12
ஆக
2024
01:08
சென்னை : ஆன்மிக சேவையாற்றும் அமா சர்வமங்களா சார்பில், இலவசமாக ஸ்லோகங்கள் போதிக்கும், ஆன்லைன் வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அமா வேதிக் என்பது, தமிழகத்தைச் சேர்ந்த அமைப்பு. இந்த அமைப்பு, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழக பாரம்பரியம் மற்றும் சடங்குகளை பாதுகாக்கிறது. அது குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சியை மேற்கொண்டு, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கிறது.இந்த அமைப்பின் பிரதானமான, அமா சர்வமங்களாவில் உலகளாவிய அளவில், 10 வயது முதல் உள்ளவர்களுக்கு இலவச வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன், 66வது பிரிவாக, வேல் விருத்தம் ஸ்லோக ஆன்லைன் வகுப்புகள், ஆகஸ்ட் 14ல் இரவு 8.30 முதல், 9:45 மணி வரை இலவசமாக நடத்தப்படுகிறது. மூன்று வாரங்கள் நடைபெறுகிறது. இது குறித்த தகவல்களுக்கு, 75500 55046 என்ற, மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் தகவலுக்கு Ama Sarvamangala என்ற செயலியை டவுன்லோட் செய்யவும்.