காரைக்காலில் ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2024 02:08
காரைக்கால்; காரைக்காலில் அகில இந்திய ஆதி சைவசிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சன்னதி தெருவில் ஸ்ரீ இந்திரா நிவாஸ் நடைபெற்றது.இதில் அகில இந்திய தலைவர் டாக்டர் சிவஸ்ரீ சிவசங்கர சர்மா சிவாச்சாரியார் தலைமை தாங்கினார். அகில இந்திய துணைத் தலைவர் திருநள்ளாறு ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார். மாநில இணைச்செயலாளர் சக்தி மணிகண்ட சிவாச்சாரியார் சிறப்புரை பாடசாலை குரு முதல்வர் சுந்தரேச சிவாச்சாரியார் உரையாற்றினார். ஆலோசனைக் கூட்டத்தின் ஏற்பாடுகளை காரை மாவட்ட இணைச்செயலாளர் ஹரிஹர சிவாச்சாரியார் செய்திருந்தார் கூட்டத்தில் முக்கியமாக குரு பூர்ணிமாவை முன்னிட்டு வயதில் மூத்த சிவாச்சாரியார்களுக்கு சால்வை மலர்மாலை அணிவித்து சிஷ்ய மாணவர்கள் இளையவர்கள் ஆசீர்வாதம் பெற்றனர்.பின்னர் சுவாதி நட்சத்திர நன்னாளில் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை ஐக்கிய தினத்தை அவரவர் ஆலயத்தில் மற்றும் இல்லங்களில் அனுஷ்டிப்பது மேலும் சுந்தரர் ஐக்கிய பதிக பாராயணம் தேவாரம் நால்வர் வழிபாடு மற்றும் ஆதிசைவ சிவாச்சாரியார் குழந்தைகளை கொண்டு தேவாரம் ஒப்புவித்தல் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பாக சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது.மேலும் ஆலயங்களில் ஆன்மீகம் தொடர்பான சொற்பொழிவுகள் வாரம் தோறும் ஒரு நாளை தேர்வு செய்து மாலை வேலையில் ஆலயத்திலும் ஆலய வளாகத்திலும் நடத்திட வலியுறுத்தி புதுச்சேரி மற்றும் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது. தேவார பாடல்கள் புத்தகம் அச்சிட்டு அரசின் சார்பாக குறைந்த விலையில் பக்தர்களுக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் உடைய பதினெட்டாவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் 14ம் தேதி மயிலாடுதுறையில் நடைபெறுகிறது.அதில் வட்ட மாவட்ட மாநில அகில இந்திய பொறுப்பாளர்கள் மற்றும் பிற மாநில பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களையும் கலந்து கருத்துக்களை முன்வைக்கும்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதில் இணையத்தின் வாயிலாக புதுச்சேரி மாநில தலைவர் சிவஸ்ரீ பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் தமிழ் மாநில அமைப்பு சேலம் செயலாளர் ராஜலிங்க சிவாச்சாரியார் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.இதில் சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.