சிங்கம்புணரி; புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் ஆடி மாத கடைசியில் அழகர்கோவிலுக்கு காவடி எடுத்துச் செல்வது வழக்கம். இன்று 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் 49வது ஆண்டாக சிங்கம்புணரி வழியாக காவடி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் முன்பாக முன்னாள் எம்.எல்.ஏ., ராம. அருணகிரி தலைமையில் காவடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. திருமுருகன் வார வழிபாடு சபை சார்பில் அதன் தலைவர் பொன்.முத்துவிநாயகம் தலைமையில் ஆக. 9 ல் இலுப்பூர் பொன்வாசி நாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி புறப்பட்டனர். ஆக. 14 அழகர் கோவிலை அடைகின்றனர். அங்கு முருகனுக்கு 36 வகையான் அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றது.