ஆடி கடைசி செவ்வாய்; முருகன், அம்மனை வழிபட சங்கடம் நீங்கும், செல்வம் பெருகும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2024 10:08
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் விசேஷமானவை. ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். வாரத்தின் ஏழு நாட்களில் மூன்றாவது நாளாக இடம்பிடிப்பது செவ்வாய்க்கிழமை. பொருளாதார நிறைவையும் வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும். செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் அங்காரகனுக்கு முக்கியத்துவம் உகந்த நாளாகும். தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்புகளையும், மாபெரும் சக்தியையும் பொங்கிவரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும். முருகன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். இன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு சுபிட்சம் அடையும். வீட்டில் அம்மன், முருகனுக்கு விளக்கு ஏற்றி வழிபட நல்லதே நடக்கும்.