பதிவு செய்த நாள்
13
ஆக
2024
03:08
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: தனித்துவமாக திகழும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதம். சூரியனால் பொறுப்பு கூடும். வேலை பளு அதிகரிக்கும். பணிபுரிபவர்களுடன் ஒரு இடைவெளி ஏற்படும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு நன்மை அதிகரிக்கும். சுக்கிரனால் பணவரவு திருப்திதரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும். முயற்சியில் வெற்றி உண்டாகும். யோகக்காரகன் ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். வரவேண்டிய பணம் வீடு தேடிவரும். பணியாளர்களால் லாபம் அதிகரிக்கும். பிற மொழியினர், இனத்தினர் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றமடையும். குருவால் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன்வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பெண்களுக்கு கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு விலகும். தந்தை வழியில் லாபம் உண்டாகும். கோயில் வேண்டுதல்களை நிறைவேற்ற நேரம் கிடைக்கும். ஒரு சிலர் புதிய இடம் வாங்குவீர். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விவசாயிகள் நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: செப்.12.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 19,24,28. செப். 1,6,10.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட நன்மை அதிகரிக்கும். சங்கடம் நீங்கும்.
ரோகிணி: தெளிவான சிந்தனையுடன் திகழும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் அதிர்ஷ்டமான மாதம். குரு மங்கள யோகத்தால் நினைத்த வேலைகளை நினைத்தபடி செய்து முடிப்பீர். சமூகத்தில் அந்தஸ்தும் உயரும். ஒரு சிலருக்கு பொறுப்பும் பதவியும் கிடைக்கும். குருவால் பணியிடத்தில் இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வெளியூர் வாசம் சிலருக்கு ஏற்படும். இதுவரை சந்தித்த பிரச்னை, சோதனை எல்லாம் விலகும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். லாபம் அதிகரிக்கும். உங்கள் நிலை உயரும். திருமணம், குழந்தை பாக்கியம், சொத்து என்ற எதிர்பார்ப்பு நிறைவேறும். பெண்களுக்கு குடும்பம், வேலையில் இருந்த நெருக்கடி தீரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டாகும். பொன் பொருள் சேரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். ராகுவால் பல வழியிலும் வருவாய் வரும். உங்கள் மனதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படும் புதிய நட்பு அமையும். கலைஞர்கள் கனவு நனவாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். விவசாயிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: செப்டம்பர் 12,13.
அதிர்ஷ்ட நாள்: ஆகஸ்ட் 20,24,29. செப்டம்பர் 2,6,11,15.
பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட உங்கள் முயற்சி வெற்றியாகும்.
மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: அதிர்ஷ்ட வாய்ப்புகளோடு வாழும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றமான மாதம். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் தெய்வ அருள் உண்டாக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னை சுமுகமாக முடியும். நீண்டகாலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தி வந்தவர்களின் நிலையை மாற்றும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். நண்பர்களால் ஆதாயம் தோன்றும். இழுபறியாக இருந்த முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். செய்துவரும் தொழிலில் இருந்த தடைகள் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த மாற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தம்பதியர்களுக்குள் அன்னியோன்யம் உண்டாகும். அரசியல்வாதிகள் நிலை உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு போட்டித் தேர்வுகள் வெற்றியை உண்டாக்கும். குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள்.
சந்திராஷ்டமம்: செப். 13.
அதிர்ஷட நாள்: ஆக. 18,24,27. செப். 6,9,15.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வணங்கிட வாழ்வில் வளமுண்டாகும்.